இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவை ஊற்று

கோவை ஊற்று   அகந்தை அகற்றி அகத்தைப் போற்று. (1) அகப்படாத திருடன் உருப்படாமல் போவான். (2) அஞ்சத்தக்க இடத்தில் அஞ்சாதவன் அழிவான். (3) அஞ்சி வாழாமல் நேர்மையாய் வாழ். (4) அஞ்சிச் செய்வது பழிசொல் ஏற்கும். (5) அஞ்சா திருப்பது ஆண்மைக் கழகு. (6) அடுத்தவர் நோகத் தூற்ற வாழாதே. (7) அதிகக் கலவி விரைவில் முதுமை. (8) அதிக சுகம் கேடு தரும். (9) அதிகாரத்தால் அடை வது எப்போதும் நிலைக்காது. (10) அர்ப்பணிப் போடு எப்பணியும் செய். (11) அலட்சியம் செய்வோரிடம் அன்பைத் தேடாதே. (12) அல்லன செய்யினும் நல்லன கொள்ளே. (13) அறத்தை விளம்பல் அறவோர்க் கில்லை. (14) அறத்தொடு நிற்போற்கு அறநூல் வேண்டாம். (15) அறம் செய்ய, கரம் நீட்டு. (16) அறிவிலான் செய்தபிழை வழுக்கிச் செலல்நலம். (17) அன்பு வருவது, வம்பு பெறுவது. (18) ஆடிக் காற்றைச் சூடிக் கொள்ளாதே. (19) ஆணவக்காரன், நல்ல நண்பர்களை இழப்பான். (20) ஆராத கோபம் உறவைச் சேர்க்காது. (21) ஆறு சுருங்க ஊறு நேரும் . (22) இயக்கம் இல்லாத பொருள் பாழ். (23) இயக்குபவன் இல்லையேல் ஓடுவது ஓடாது. (24) இரப்போனிடம் செல்வச் செருக்கு கொள்ளாதே. (25) இழப்பின் விலையே அறிவுக் கொள்முதல். (26) இழிபொழி ...